தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக மாணவர்களின் உயர்கல்விக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வரை ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த கடன் தொகை ஐந்து லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கு சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

அதாவது கூட்டுறவு வங்கிகளில் மாணவர்கள் உயர்கல்விக்கு கடன் பெற இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வி பயிலும் காலம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் மற்ற கடன் வசூலிக்க பின்பற்றப்படும் சட்டபூர்வ வழிமுறைகள் கல்வி கடனுக்கும் பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் கட்டாயமாக இணை விண்ணப்பதாரராக சேர வேண்டும். திருமணமானவர் என்றால், அவரின் கணவர்/மனைவி/மாமனார்/மாமியார் யாரேனும் ஒருவரில் இணை விண்ணப்பதாரராக இருக்கலாம். மாணவர் வேறு எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் இருந்தும் கடன் பெறவில்லை என்பதை உறுதி செய்த பிறகு  கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.