
பெங்களூரில் அசோக் என்பவர் பழக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் இவர் கூட்டம் அதிகமாகவுள்ள இடங்களில் நிற்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனத்தை திருடி விற்று வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுபற்றி அறிந்த அசோக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து அவருடைய தாயார் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் சிறையிலிருந்து வெளிவந்த அசோக் கிரி நகர் பகுதியில் ஐடியில் பணிபுரியும் ஒருவரின் இருசக்கர வாகனத்தை அவருடைய நண்பர் சதீஷின் உதவியுடன் திருடியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அசோக் மற்றும் சதீஷை கைது செய்தனர்.
பின்பு இருவரையும் காவல்துறையினர் கோட்டில் ஆர்ஜர் செய்தனர். அங்கு நீதிபதி வழக்கை பற்றி அசோக்கிடம் விசாரணை நடத்தியபோது அவர் தனது நண்பரின் மனைவிக்கு மார்பக புற்றுநோய் இருப்பதால் தான் திருடியதாகவும். திருடிய பணம் அனைத்தையும் அவரது மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக கொடுத்ததாகவும் அவர் கூறினார்.