
இன்றைய காலகட்டத்தில் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகிவிட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்தது. இதேபோன்று கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமும் வெளியாகி உள்ள வரவேற்பை பெற்றது. அதன்பிறகு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது கொடுத்துள்ள ஒரு பேட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு கதாபாத்திரத்தில் எந்த நடிகர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பது பற்றிய தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ரன்பீர் கபூர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதேபோன்று ஹர்திக் பாண்டியா பயோபிக்கில் ரன்வீர் சிங்கும், பும்ராவாக நடிகர் ராஜ்குமார் ராவும், என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்தால் விக்ராந்த் மாஸியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.
அதன் பிறகு ரிஷப் பண்ட் கதாபாத்திரத்தில் நடிகர் நானியும், ஷிகர் தவானாக நடிகர் அக்ஷய் குமாரும், சூரியகுமார் யாதவ் கதாபாத்திரத்தில் நடிகர் சுனில் செட்டியும், யஸ்வேந்திர சாஹல் கதாபாத்திரத்தில் ராஜ்பல் யாதவும் நடிக்கலாம். மேலும் கேப்டன் ரோகித் சர்மா கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் பொருத்தமான ஆள். அவர் நடித்தால் கண்டிப்பாக ரோகித் சர்மா கதாபாத்திரம் கச்சிதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த விஜய் சேதுபதி ரோஹித் சர்மா பயோகத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.