பிரபல இயக்குனரான சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படம் ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு படத்தின் கதாநாயகனான ராம்சரனும் கதாநாயகியான கியாரா அத்வானியும் சென்றுள்ளனர்.

அப்போது பேசிய சல்மான் கான், இதற்கு முன்பு ராம்சரண் நடித்த ராஜமவுலி இயக்கிய RRR திரைப்படத்தின் வசூலை விட இரண்டு மடங்கு கேம் சேஞ்சர் வசூல் செய்யும் என்று கூறியுள்ளார். RRR திரைப்படம் ரூ.1150 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.