கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் இன்று பேசிய அவர், உயிரிழந்த இருவரின் மாதிரிகளை புனே ஆய்வகத்தில் சோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நிபா வைரஸை  கட்டுப்படுத்த மாநில அரசுடன் மத்திய அரசின் குழு இணைந்து பணியில் ஈடுபடும் என்றார்.