
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், பலர் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நீரில் மூழ்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 16 பேர் பலியான இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிதியில் இருந்து 2 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 25 பேர் மட்டுமே ஏற்றக் கூடிய படகில் 40 பேர் ஏற்றியதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.