
கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள் கொட்ட பட்டன.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சுத்தமல்லியை சேர்ந்த மனோகர் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பணம் வாங்கிக்கொண்டு கழிவுகளை கொட்ட ஏஜெண்டாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.