திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம்  பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பாலமுருகன் தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பாலமுருகன் வேலையில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பாலமுருகன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

கடந்த மூன்று நாட்களாக  குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார்  விசாரணை நடத்தினர் .அப்போது தோமையார்புரம் அருகே இருக்கும் குப்பை கிடங்கில் சடலம்  கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சடலமாக கிடந்த நபர் காணாமல் போன பாலமுருகன் என்பது உறுதியானது.

மர்ம நபர்கள் யாரோ பாலமுருகனின் கை, கால்களை கட்டி கழுத்து பகுதியை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது தெரியவில்லை இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.