
மத்திய இத்தாலியில் உள்ள உம்ப்ரியா பகுதியில் அமைந்துள்ள டெர்னி சிறையில், ஒரு கைதிக்குத் தனிப்பட்ட செக்ஸ் ரூம் வழங்கப்பட்டு, அவருடைய காதலியுடன் இருவர் இடையே இரகசிய சந்திப்பு நடைபெற்றது.
இது இத்தாலியின் சிறைத்துறையில் நடந்துள்ள வரலாற்று முன்னேற்றம் என கூறப்படுகிறது. இத்தாலி அரசின் நியாயவியல் அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த சந்திப்பு அனுமதிக்கப்பட்டது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரி கூறியதாவது, “சந்திப்பு மிகவும் அமைதியாக நடைபெற்றது. ஆனால் இதில் ஈடுபட்ட நபர்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார். இதற்கான வழிகாட்டுதலின்படி, இரண்டு மணி நேரம் வரை இருக்கக்கூடிய, படுக்கையுடன் கூடிய தனிச்சிறை அறை வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வகை சந்திப்புகள் தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள நிலையில், இத்தாலியும் இப்போது அதே பாதையை தொடருகிறது. சிறை கண்காணிப்பின்றி சுயதனிமையுடன் உள்ள உறவுகள் கைதிகளின் மனநிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் தற்போது 62,000-க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பதுடன், இது சிறை கொள்ளளவின் 21% அதிகமாகும். மேலும், தற்கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ள நிலையில், கைதிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த இது ஓர் முக்கிய நடவடிக்கை என பார்க்கப்படுகிறது.