பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதை அதிக வருமானமாக மாற்றுவதற்காக பணத்தை பல்வேறு திட்டங்களில் சேமித்து வருகிறார்கள். இதற்கு லாபகரமான வட்டியும் கிடைக்கிறது. ஆரம்பத்தில் உங்களுடைய முதலீட்டில் வளர்ச்சி அளவு சிறியதாக இருக்கும். ஆனால் வருடங்கள் ஆன பிறகு அதன் மதிப்பானது அதிகரித்துக் கொண்டே தான் செல்லும். வருடங்கள் செல்ல செல்ல உங்களுடைய கார்பஸும் பெரிதாக வளரும். சராசரியாக வருடத்திற்கு SIP திட்டத்தின் மூலமாக 12 சதவீதம் வருமானம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். குறைந்தது இந்த திட்டத்தின் கீழ் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.

எடுத்துக்காட்டாக முதல் ஆண்டில் மாதம் 500 ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த ஆண்டில் 10% கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். இரண்டாவது ஆண்டில் 550 முதலீடு செய்ய வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் 10% கூடுதலாக முதலீடு செய்து வந்தால் 25 ஆண்டுகளுக்கு பிறகு 12 சதவீத வட்டியோடு 44 லட்சத்து 17 ஆயிரத்து 62 ரூபாய் கிடைக்கும். மேலும் இந்தத்  திட்டத்தின் கீழ் கூடுதலாகவும் முதலீடு செய்து அதிகமான வருமானத்தை பெறலாம். எனவே எதிர்கால தேவைக்கு சேமிக்க விரும்பும் இளம் தலைமுறையினர் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.