உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. ‌ இங்கு சாக்கு மூட்டையில் ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமி கொசுவர்த்தி வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தது தெரிய வந்தது.‌‌ அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்ததில் ஒருவர் சிறுமியை பின் தொடர்ந்து சென்றது தெரிய வந்தது.

அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர் ஒரு சாக்கு மூட்டையை தூக்கி செல்வதும் பதிவாகியிருந்தது. அந்த நபரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர் இர்ஷாத் என்பது தெரியவந்தது. அதாவது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில் சிறுமி கத்தி கூச்சலிட்டதால் கோபத்தில் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி வீசியது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.