மதுரை மாவட்டம் முத்துப்பட்டியில் கள்ளர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கடந்த வருடம் காலை உணவு திட்டத்தை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது உடல் மெலிவாகவும் சோர்வான தோற்றத்துடனும் விஷ்ணு என்ற ஒரு மாணவன் அங்கு இருந்தான். இந்த மாணவன் தற்போது 7-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த மாணவனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்திய நிலையில் அதன் பின் மாணவனின் குடும்பத்தை வீட்டிற்கு அழைத்து அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்தார்.

அப்போது அந்த மாணவன் விளையாட்டு எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும் என்று கூறினான். அப்போது அமைச்சர் பிடிஆர் தற்போது உடல் எடை குறைவாக இருப்பதால் சைக்கிள் ஓட்டுவது மிகவும் கடினம். எனவே உடல் எடை 30 கிலோ வந்ததும் சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தற்போது அந்த மாணவனின் உடல் எடை 30 கிலோவை எட்டியுள்ளது. இதனால் அமைச்சர் சொன்ன வாக்கை  நிறைவேற்ற விஷ்ணுவுக்கு தற்போது சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அந்த சைக்கிளை மாணவன் மிகவும் மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்ட நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.