பீகார் மாநிலம் ஆராரியா மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த காணொளியில் திருடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஒரு நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்.

அவரை கட்டிப்போட்ட கொடுமைக்காரர்கள் அவரது அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை போட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் ஷிஃபாத் என்ற நபரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் நிதீஷ் குமாரின் ஆட்சியில் இதுபோன்று நடப்பது தலிப்பான்கள் ஆட்சியில் நடப்பதை விட கொடுமையாக இருப்பதாக விமர்சித்துள்ளனர்.