
ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் கொடூர ஆட்சியில் சிறுவனின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹுசைன் என்ற சிறுவன், கையடக்க சிடி பிளேயருடன் இசை கேட்டு இருந்ததற்காக, ஐஎஸ்ஐஎஸ் மதப் போலீசரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இஸ்லாமிய அரசு நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்தது. இஸ்லாமிய சட்டத்தின் நெறிமுறைகளை மீறியதற்காக, பொதுவெளியில் ஹுசைனுக்கு மரண தண்டனையை விதித்து, அவரது தலையை துண்டித்தனர்.
இது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிரமான மத கட்டுப்பாட்டை கற்பிக்கும் ஒரு எச்சரிக்கை நிகழ்வு. குறிப்பாக, இசையை கேட்பது, இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரான செயலாகக் கருதப்பட்டதால், இது போன்ற சித்ரவதைகள், தண்டனைகள் வழங்கப்பட்டது. சிறுவர்களும் இளைஞர்களும் கூட, அவர்களின் செயலில் சிறிய தவறுகள் இருந்தாலும் கூட, கொடூரமான தண்டனைகளை எதிர்கொள்வது வழக்கமாகிவிட்டது.