
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் கேஆர் காவல் நிலையத்தில் சொத்து தொடர்பாக தாய் மற்றும் மகனுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரம் அடைந்த மகன் தனது தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
உடனடியாக போலீசார் தீயை அணைக்க முயற்சி செய்த நிலையில் அந்தப் பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதுவரை தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.