
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புறம் பொன்னானி பகுதியில் சுனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் செர்ப்புளசேரி பகுதியில் நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறினார். நேற்று சுனிதா அலறி சத்தம் போட்டார். அதனைக் கேட்ட சுனிதாவின் மகன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது தனது தாய் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுனிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அவர் சுனிதாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. கொலைக்கான காரணம் பற்றி தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.