
இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பையை வென்றுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அவர்களை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் மும்பையில் திறந்த வெளி பேருந்தில் உலக கோப்பையுடன் கிரிக்கெட் வீரர்கள் வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழா முடிவடைந்த பிறகு கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அவரவர் வீடுகளுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இந்நிலையில் விராட் கோலி மட்டும் அவசரமாக மும்பை ஏர்போர்ட்டுக்கு சென்றார். அதாவது அவர் லண்டன் செல்வதற்காக ஏர்போர்ட்டுக்கு சென்றார். ஏனெனில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் குழந்தைகள் லண்டனில் இருக்கிறார்கள். மேலும் அவர்களை சந்திப்பதற்காக தான் விராட் கோலி அவசரமாக லண்டன் கிளம்பி சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைராகி வருகிறது.
View this post on Instagram