குஜராத் மாநிலம் தங் மாவட்டத்தில் சபுதரா கட்பகுதியில் மலைப்பகுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 65 பேருடன் சுற்றுலா பேருந்து ஒன்று சென்றது. இவர்கள் அனைவரும் சுற்றுலா முடிவடைந்த பிறகு மாலையில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இதனை பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த பேருந்து மலைப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் திரும்பியது.

அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு 60-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.