
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து கொல்கத்தாவில் டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல் மம்தா பானர்ஜி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் போராட்டத்தை இன்னும் கைவிடவில்லை. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வழக்கின் விசாரணையின் போது சிபிஐ கண்டறிந்த உண்மைகள் மன அமைதியை குலைப்பதாக இருப்பதாக தலைமை நீதிபதி சந்திர சூட் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் நேற்று விசாரணையின் போது படித்ததை பார்த்து நாங்கள் கலக்கமடைந்தோம். இந்த தகவல்களை வெளியில் சொன்னால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதைப் பற்றி சொல்லவில்லை என்று கூறினார்.