பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதார ரீதியாக பல சிக்கல்கள் எதிர் கொள்ளப்பட்டு வருகிறது . அந்த நாட்டில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இருப்பினும் இவ்வளவு பணம் வீக்கத்திற்கு மத்தியிலும் பாகிஸ்தானை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இவருடைய பிள்ளைகளை நாட்டின் மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைத்திருப்பதோடு அவர்களுக்கு ஒரு கோடி அளவிற்கு காப்பீடு எடுத்துள்ளாராம் .

இவருடைய பெயர் ஷவுகத். பாகிஸ்தானின் பணக்கார பிச்சைக்காரரான இவர் தெரு தெருவாக உணவிற்காகவும்,  பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார். கடந்த 2021 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இவருடைய வங்கி கணக்கில் மட்டும் 1.7 மில்லியன் பணம் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வரி வசூலிக்கும் நிறுவனமான பெடரல் போர்டு ஆப் ரிவென்யு கூறியிருக்கிறது. பிச்சை எடுப்பதன் மூலமாக தினமும் 1000 ரூபாய் பணத்தை இவர் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.