
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது. மக்கள் தினம்தோறும் தங்கள் பயணத்தை பேருந்து, ரயில் மற்றும் விமான மூலமாக மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே பயணம் செய்து தங்களின் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து மதுரை மற்றும் திருச்சிக்கு 13 ஆயிரம் ரூபாயாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்களில் செல்வதை விட விமானத்தில் செல்வதால் குறைந்த நேரத்தில் சென்று விட முடியும் என்பதால் பெரும்பாலானோர் விமானத்தில் பயணிக்கின்றனர். ஆனால் தற்போது விமான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.