ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய் வரை விற்பனையான இளநீர் தற்போது 60 முதல் 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக செவ்விளநீர் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றம் பணச்சுமையை மேலும் அதிகரிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.