
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதார்நாத் கோவில் வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கோதார்நாத் கோவிலுக்கு சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் சென்ற இளம் பெண் ஒருவர் கோவில் வளாகத்தில் காதலை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர்கள் இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொண்ட நிலையில் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து கோதார்நாத் கோவிலின் புனிதம் பாதிக்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்த நிலையில் கோதார்நாத் கோவில் வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்த கோவில் நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.