
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆனந்தன் (30)என்பவர் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் கோர்ட்டுக்கு வேலைக்காக வந்துள்ளார். அப்போது மதியம் ஒரு மணி அளவில் ஆனந்தன் நீதிமன்றத்தை விட்டு வெளியே சென்று நிலையில் ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தார். அவர் நடுரோட்டில் வைத்தே ஆனந்தனை திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் ஆனந்தனுக்கு 8 இடங்களில் உடம்பில் வெட்டு காயம் பட்டது. அந்த வக்கீல் கோர்ட் வெள்ளத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் அந்த நபர் நீதிமன்றத்திற்குள் சென்று அரிவாளோடு மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்தார்.
அவருடைய பெயர் குமாஸ்தா ஆனந்தகுமார் (39). உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சமூகத்திற்கு ஆனந்த குமாரின் மனைவி சத்யாவதிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில் இவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் சத்யாவதி வக்கீல் ஆக இருக்கும் நிலையில் அவருக்கும் கண்ணனுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. மேலும் இதனால் தான் அவருடைய கணவர் பழிவாங்குவதற்காக கண்ணனை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது.