தெலங்கானா மாநிலத்தில் சமைக்காமல் இருந்த மனைவியை கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் கிஷ்டம்பேட்டைச் சேர்ந்த சங்கரம்மா என்பவர் கோழிக் கறி சமயல் செய்யாததற்காக அவரது கணவர் சாட்பெல்லி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பான விசாரணையில், சாட்பெல்லி கோழி கறி செய்யுமாறு மனைவி சங்கரம்மாவிடம் கேட்டுள்ளார். கோழிக்கு பதிலாக கத்திரிக்காய் கறி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் சங்கரம்மாவை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.