
அமைச்சர் கே.என்.நேரு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தெனாலியுடன் ஒப்பிட்டு பேசி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தெனாலி பயப் பட்டியலை விட இந்த பழனிச்சாமி பயப் பட்டியல் ரொம்ப பெரியது. பாஜகவுடன் அதிமுக கள்ள கூட்டணி வைத்துள்ள நிலையில் அதனை அடிக்கடி நிரூபித்து வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுகவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட போது கண்டனம் என்றும், பாஜகவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் வலியுறுத்தல் என்றும் இந்த கோழைச்சாமி பாஜகவின் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பழனிச்சாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ என்றாலும் பயம். இப்படி பழனிச்சாமியின் பயப்பட்டியல் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று ஆக்ரோஷமாக பேசி இருக்கிறார். கோழைக்கு என்ன ஆசை என்றுதான் இதை பார்க்கும் போது தோன்றுகிறது என்று கூறியுள்ளார். மேலும் பெட்ரோல் மற்றும் கேஸ் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து என்று பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.