
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரிசேரி கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் சமீபத்தில் திருவிழா நடந்து முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜைக்காக மைக் செட் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் அந்த பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அவரின் வீட்டின் அருகே தான் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு வயரை தூக்கி திருப்பதி தன் மேலே போட்ட நிலையில் அதன் ஒரு முனை மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதனால் திருப்பதி அலறிய நிலையில் உடனடியாக அவருடைய மனைவி, பாட்டி பாக்கியம் மற்றும் சகோதரர் தர்மன் ஆகியோர் ஓடி வந்தனர்.
இதில் அவருடைய மனைவி லலிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர்கள் அனைவரும் சேர்ந்து திருப்பதியை காப்பாற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக லலிதா, பாக்கியம் மற்றும் திருப்பதி ஆகியோர் உடலில் தீப்பிடித்து எரிந்தது. மூவரும் தீ விபத்தில் உடல் கருகி பலியாகினார்.
இந்த விபத்தில் தர்மர் மற்றும் கவின்குமார் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.