
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட நிலையில் தேர்தலை காரணம் காட்டி அவர்கள் நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
எனவே இந்த உத்தரவை ரத்து செய்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர் தன் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் முடிவடைந்து விட்டதால் தேர்தலை காரணம் காட்டி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்காமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறிய நீதிபதி அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.