புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக லிப்ட், ஜெனரேட்டர் என சகல வசதிகளுடன் ஏழைகள் வசிக்க 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

புதுச்சேரியின் குமரகுருவள்ளம் பகுதியில் அமைந்துள்ள 3 அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 216 குடியிருப்புகள் அடங்கிய தரைதளம், 12 தளம் கொண்ட இரண்டு கட்டடங்கள் 45.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. ஒவ்வொரு வீடும் பால்கனி வசதியுடன் 407 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்டிடத்திலும் இரண்டு லிப்ட் மற்றும் ஜெனரேட்டர் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சகல வசதியுடன் கட்டப்படும் குடியிருப்புகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணிகள் முடிந்து வீடுகள் ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளார்.