
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக உடன் கூட்டணியை முறித்துகொண்ட அதிமுக இத்தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலையில் இந்த சோதனையானது நடைபெறுகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் விஜயபாஸ்கர் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் @Vijayabaskarofl அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். @AIADMKOfficial
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) March 21, 2024