கடலூர் மாவட்டம் எம்.எம் புதூரை சேர்ந்தவர் நாகராஜ். அவரது மகன் அப்புராஜ்(22) கடந்த எட்டாம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள் அப்புராஜின் நெருங்கிய நண்பர் சரண்ராஜ்(22) என்பவரும் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அப்புராஜ், சரண்ராஜ் ஆகியோரின் நெருங்கிய நண்பர் பால்ராஜ் குவாரி நடத்தி வரும் கணேசன் என்பவரிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த ஜனவரி 22-ஆம் தேதி மது குடித்துக் கொண்டிருந்தபோது சரண்ராஜும், அப்புராஜும் இணைந்து பால்ராஜின் சகோதரியை கிண்டல் செய்துள்ளனர் இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த அப்புராஜ் தனது கூட்டாளிகளுடன் இணைந்து பால்ராஜையும், சரண்ராஜையும் இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு என்எல்சி மணல்மேட்டில் இருவரின் உடல்களையும் புதைத்து ஒரு லோடு லாரி மண்ணை கொட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரின் உடல்களையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.