கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும் சக மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அந்த மாணவர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பல்வேறு இடங்களுக்கு அளித்து சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.