தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான திரைப்படம் கேம் சேஞ்சர். கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஐந்து நாட்களைக் கடந்த கேம் சேஞ்சர் படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி பாக்ஸ் ஆபிஸில் ஐந்து நாட்களை கடந்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் உலக அளவிலான வசூல் 180 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது. 450 கோடி வசூல் செய்தால் தான் படம் வெற்றி படமாக கருதப்படும் என்று தகவல்கள் கூறப்படுகிறது. ஆரம்பம் முதலே கேம் சேஞ்சர் திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.