திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. மனநலம் குன்றிய சரஸ்வதியை அவரது மகள் பிரேமா கவனித்து வந்தார். இந்த நிலையில் சரஸ்வதியின் பேரன் பத்மநாபன் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பத்மநாபன் ஜாமினில் வெளியே வந்தார். அப்போது மனநலம் குன்றிய சரஸ்வதி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். இதனால் அறையில் உள்ள கட்டிலில் சங்கிலியால் கட்டிப்போட்டு சரஸ்வதியை கவனித்து வந்தனர்.

நேற்று முன்தினம் பத்மநாபன் சரஸ்வதிக்கு சாப்பிட சப்பாத்தி கொடுத்துள்ளார். ஆனால் சரஸ்வதி சாப்பிடாமல் அடம் பிடித்தார். இதனால் கோபமடைந்த பத்மநாபன் சுத்தியலால் சரஸ்வதியின் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.