
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நேற்று நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது, தினகரன் தேனியில் தோல்வியடைந்த நிலையில் அதிமுகவை பழனிச்சாமி அழித்துவிடுவார் என்று உலக மகா ஜோசியர் போன்று பேசி வருகிறார். ஜெயலலிதாவுக்கு சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் உதவியாக வந்தவர்கள். ஜெயலலிதா ஒரு எதார்த்தமானவர். அவர் பிறக்கும்போதே வெள்ளி கிண்ணத்தில் பால் குடித்தவர்.
அவருக்கு நல்லது எது கெட்டது எது என்று தெரியாது. அப்படி இருந்த குடும்பத்தில் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக சசிகலா நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உதவியாளராக வந்தவர் தினகரன். இவர்களின் ஆயிரம் குடும்பம் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாகி விட்டனர். அங்கிருந்த எடுத்த பணத்தை வைத்து இருவரும் ஆட்சியை பிடிப்போம் என்று கூறுகிறார்கள். அதன் பிறகு ஆட்சி காரைக்குடியில் இருப்பார்கள் அங்கு போய் ஆட்சியைப் பிடிக்குமாறு கூறினார். மேலும் முன்னதாக அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு கூட்டணி கட்சிகள் 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.