தமிழகத்தில் அதிமுக தற்போது இரண்டாவது பிளவுபட்டு நிற்கும் நிலையில் அதிமுகவை காப்பாற்ற போவதாக சசிகலா கூறியுள்ளார். இந்த நிலையில் சசிகலா கூறியதற்கு இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார்? என்று சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ், அதிமுகவில் யாரும் ஜாதி பார்ப்பது இல்லை. ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்பதற்காக சசிகலா அதிமுகவை விமர்சிக்கின்றார். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. கட்சியை காப்பாற்றுவேன் என்று சசிகலா கூறுவது மூன்று ஆண்டு வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வது போல உள்ளது என்று கிண்டல் அடித்துள்ளார்.