திருச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக வழிநடத்தி வருவதாக புகழாரம் சூட்டினார். மேலும் 2017-ஆம் ஆண்டு சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் நடந்தது. அதே சமயம் நீதிமன்ற தீர்ப்பால் சசிகலா சிறைக்கு சென்று விட்டார். அவரை முதல்வராக வரவிடாமல் இறைவன் தடுத்துவிட்டார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.