
தமிழக சட்டசபை கூட்டத்தொகை 2025 ஆம் ஆண்டு பிறந்த பிறகு முதல் முறை நடந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆனால் அவர் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பிறகு சபையை விட்டு வெளியேறிவிட்டார். அதாவது தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு ஆளுநர் உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு படித்தார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர் துரைமுருகன் அசந்து தூங்கிவிட்டார். இதற்கு முன்பு கூட சில நிகழ்ச்சிகளில் அமைச்சர் துரைமுருகன் இப்படி தூங்கியுள்ளார். மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கி நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
பாவமே ! மக்கள் பிரச்சனைகளுக்காக டெல்லிக்கு சென்று வந்த களைப்பு தான் . நிம்மதியா தூங்க விடாமா இப்படி பண்றீங்களே பாவம் அவர் மக்களுக்காக உழைத்து உழைத்து அயர்ந்து கொண்டிருக்கிறார். https://t.co/RbyhcLFcvY
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) January 6, 2025