
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கு தற்போது பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நடிகர் விஜய் கொஞ்சமாவது சட்டங்களையும் விதிகளையும் படித்துவிட்டு வரவேண்டும். இந்த பிரச்சனை வந்ததற்கு முதல் காரணம் திருச்செந்தூர் பக்கத்தில் இருக்கக்கூடிய சோழன் கட்டிய சிவன் கோவிலை வக்பு சொத்துக்கள் என்று கூறியதுதான். இதை எதிர்த்து நான் போராட்டம் நடத்தியதால் அந்த பிரச்சனை தவிர்க்கப்பட்டதோடு இது தொடர்பாக நான் கிரண் ரிஜஜூ மற்றும் உள்துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினேன்.
இந்த வக்பு மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது என்று கூறுகிறார்களே அதில் என்ன எதிராக இருக்கிறது என்பதை கூற முடியுமா.? தமிழகத்தில் 53834 சொத்துக்கள் இந்துக்கள் கோவில்களுடையது. நம்ம கொண்டுவந்துள்ள வக்பு மசோதாவில் முஸ்லிம்களுக்கு எதிராக என்ன இருக்கிறது என்பதை நடிகர் விஜயால் கூற முடியுமா.? அவருக்கு புஸ்ஸியா பசியான்னு கூட தெரியல. அவருக்கு சப்போர்ட் பண்ணுவதே இந்த மீடியா தான். ஆம்பூர் அருகே 2 வன்னியர் பெரியவர்கள் 96 ஏக்கர் கோவிலுக்கு எழுதி வைத்த சொத்தினை முஸ்லிம்கள் அபகரித்துள்ளனர்.
இப்படி இஸ்லாமியர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓவைசி போன்ற 100 பேர் மட்டும் தான் 12 லட்சத்து 40000 ஏக்கர் நிலத்தையும் வைத்துள்ளனர். எங்காவது முஸ்லிம் விதவைகள், முஸ்லிம் ஏழைகள் முஸ்லிம் அனாதைகளுக்கு ஏதாவது சோசியல் சர்வீஸ் இந்த சட்டத்தை பயன்படுத்தி செய்துள்ளீர்களா.? இதைப்பற்றி தெரியாத அரசியல் தற்குறிகள்தான் இந்த சட்டத்தை எதிர்ப்பார்கள். மேலும் இந்த தற்குறிகளில் எங்கள் ஊரை சேர்ந்த சிதம்பரமும் இருக்கிறார் என்பதுதான் வருத்தம்.