கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டிகள் விற்பவர்கள் குறித்த தகவலை தெரிவிக்க Whats App எண்களை அறிவித்துள்ளது மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை. அதன்படி  வேலூர் – 8838608868, குடியாத்தம் – 9087756223.