கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பணம் வைத்த சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், அஜித் குமார், தர்மலிங்கம் என்பது தெரியவந்தது.

இதேபோல மாங்கினம் மாரியம்மன் கோவில் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஹரிச்சந்திரன், தங்கரத்தினம், பழனிவேலு ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.