தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜேஎன்டியுஎச் என்ற பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமிகாந்த் என்ற பயனர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், விடுதியில் உள்ள கேண்டினில் சட்னி நிறைந்த பெரிய பாத்திரத்தில் உள்ளே எலி ஒன்று நீந்துவதை பார்க்க முடிகிறது.

“சட்டினியில் எலி” பணியாளர்களின் சுகாதார பராமரிப்பில் குளறுபடி உள்ளது என்ற தலைப்பிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சுமார் 75 ஆயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதர் ராஜா நரசிம்மஹா உத்தரவு பிறப்பித்துள்ளார்.