
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் திருத்தங்கள் என்ற பகுதியில் இளநீர் கடை நடத்தி வந்தார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த கட்டு விரியன் பாம்பு ஒன்று வெங்கடேஷை கடித்தது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வெங்கடேஷ் வலியில் அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வெங்கடேஷை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.