தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் லொள்ளு சபா என்ற நகைச்சுவை தொடரில் சிறிய சிறிய வேடங்களில் நடித்த தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். இதன் பிறகு வெள்ளித்திரையில் யோகி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக பிரபலமாகியுள்ளார்.

மூன்று முறை சிறந்த நகைச்சுவையாளர் விருதுதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் விஜய்யோடு இணைந்து நடித்தார். இந்நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு கைகுலுக்கி யோகி பாபு வழிய அனுப்பி உள்ளார். இது குறித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.