கேரளா லாட்டரி மூலமாக புதுச்சேரியை சேர்ந்த பக்தருக்கு 20 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது. கேரளா அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குழுக்களில் எக்ஸ் சி 224091 என்ற லாட்டரிக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இந்த லாட்டரி சீட்டை புதுச்சேரியை சேர்ந்த நபர் வாங்கி இருப்பது உறுதியானது. சபரிமலை ஐயப்பன் தரிசனத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரம் வந்த போது இந்த லாட்டரி சீட்டை அவர் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.