
தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, அந்த வகையில் கம்பத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கம்பம் மெட்டு வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பொது வழியை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் இது ஐயப்ப பக்தர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல சபரிமலை சென்று விட்டு திரும்பும் பக்தர்கள் மலைபாதை வழியாக கீழே இறங்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் முடியும் வரை நவம்பர் 20ஆம் தேதி முதல் குமுளி மலை பாதைப்பகுதி ஒரு வழி பாதையாக பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.