திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில் திடீரென அந்தப் பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுனர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சப் இன்ஸ்பெக்டரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் போலீஸ் ஏட்டு மீது அவர் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் ஓட்டுனருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இது தொடர்பாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு தெரிய வரவே அந்த பெண்ணின் மீது கோபமடைந்தார். இதில் கோபமடைந்த அவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநரை கடுமையாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விவகாரம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் இருவரையும் ஆயுதப்படைக்கும் மாற்றி உத்தரவிட்டார். மேலும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நேற்று அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.