திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் மணிகண்டன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடுகள் ஏற்றி வருவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் தேங்காய் லோடு ஏற்றி சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஆற்றங்கரையில் ஒருவகை கிழங்கு இருந்துள்ளது. அந்தக் கிழங்கை பிடுங்கி வீட்டிற்கு எடுத்து வந்தார்.

அதன் பின் சமூக வலைதளத்தில் இது தொடர்பான வீடியோக்களை பார்த்துள்ளார். இதை சாப்பிட்டால் சத்துக்கள் பல கிடைக்கும் என தெரிந்து கொண்ட அவர் சமைத்து சாப்பிட்டார். இதையடுத்து திடீரென அவர் மயங்கி விழுந்தார்.  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.