சமையல் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபாய் மானியம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சமையல் சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதனிடையே பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபாய் மானியத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் ஒன்பது புள்ளி 59 கோடி பேர் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெற்று வருகின்றனர்.