
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் பாஜக கட்சியின் பிரமுகர் ஆவார். இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விஜய் போன்று நானும் உச்சபட்ச நடிகராக இருந்தபோதுதான் அரசியலுக்கு வந்தேன் என்று கூறினார். அதன் பிறகு அரசியலில் சில விஷயங்களில் விஜய் புரிதல் இல்லாமல் இருப்பதாக கூறினார். அதாவது அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்ட விஜய் அவர் எழுதிய அரசியல் புத்தகத்தில் உள்ள ஆளுநர் பதவி வேண்டாம் என்கிறார். அதன் பிறகு விஜய் வீட்டில் எல்லோரும் ஹிந்தி தான் பேசுகிறார்கள்.
அப்படி இருக்கும்போது மும்மொழி கொள்கையை வேண்டாம் என்று விஜய் கூறுகிறார். எல்லோரும் கூறும் ஒரு விஷயத்தையே விஜயும் செய்யக்கூடாது. அவர் தனக்கென்று தனியாக எதையாவது செய்தால்தான் அவர் நிலைத்து நிற்க முடியும் என்று கூறினார். மக்களுக்கு நல்லது செய்வதற்காக நான் மாபெரும் தலைவர்களை எதிர்த்து அப்போது அரசியலுக்கு வந்தேன் என்று கூறினார். இந்நிலையில் இதனை டிரோல் செய்யும் விதமாக தற்போது இணையதளங்களில் பெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது ஒரு பயனர் இந்த விளையாட்டில் பண அபாயம் இருப்பதால் பொறுப்புடன் விளையாடவும் என்று கமெண்ட் செய்துள்ளார். இதனை ஒருவர் ஸ்கிரீன்ஷாட் வடிவில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
